Friday, May 29, 2015

ஒரு காலத்தில் முசிறி 32 கிராமம்

ஒரு காலத்தில் முசிறி 32 கிராமம்

பொறவு முசிறி 34 கிராமம்

பொறவு முசிறி 36 கிராமம்

பொறவு முசிறி 38  கிராமம்

இது காலத்தின் கட்டாயமாகி விட்டது.

32 கிராமங்களை தவிர வெளியில் பெண் கொடுத்து எடுப்போர் ஊரை விட்டு நாட்டை விட்டு (முசுகுந்த நாடு - 32 கிராமம்) தள்ளி வைக்கப்படுவார்கள்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. பல பிரிவுகளிலும் சென்று மன முடித்து உள்ளார்கள். இதை வளர்ச்சி என்பதா வீழ்ச்சி என்பதா என்று தெரியவில்லை.

35 ல் இருந்து 45 வரை மணமாகாதோர் பட்டியல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருத்து கொண்டே செல்கிறது. இன்றைய சமகால வாழ்வானது பொருளாதார தேவைகளை நோக்கி நகர்ந்து விட்டது (அல்லது) ஆடம்பர தேவைகளை நோக்கி நகர்ந்து விட்டது என்றே கூறலாம்

"மேய்வது வனமாக இருந்தாலும் ஒதுங்குவது இனமாக இருக்கட்டும் என்பது" ஓர் வரலாற்று சொல்.

யாரையும் தாழ்த்தியோ அல்லது உயர்த்தியோ நான் கூற வரவில்லை. ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. இனங்கள் தங்கள் பூர்வீக அடையாளங்களை மெல்ல இழந்து வருவது போல தான் தோன்றுகிறது