Sunday, November 17, 2013

1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை

"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"

1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.

Monday, September 30, 2013

எந்த பட்டம் மிக சரி ? பிள்ளை அல்லது வெள்ளாளன் ?

எந்த பட்டம் மிக சரி ? பிள்ளை அல்லது வெள்ளாளன் ?

நம்மில் பலரும் வேளாளர் அல்லது வெள்ளாளன் என்ற பட்டத்தை பயன்படுத்துகிறோம்.

நம் ஜாதியின் உண்மையான பெயர் இதோ "கார்காத்த வீரகுடி வெள்ளாளன்".

அதாகப்பட்டது மழை மேகத்தை கூட, நீரனைகள் முதற்கொண்டு கட்டுப்படுத்தி காத்து வந்தவன் வீரம் கொண்ட நம் வெள்ளாளன்.
இது தான் இதன் முழு பொருள்.

சரி எந்த பட்டம் சரி. இரண்டு பட்டங்களுமே மிக துல்லியமாக பொருந்தும். பிள்ளை அல்லது வேளாளர்.

உலகறிந்த விக்கிப்பீடியாவில் நம் இனத்தின் தமிழ் தகவல்கள் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டது

உலகறிந்த விக்கிப்பீடியாவில் நம் இனத்தின் தமிழ் தகவல்கள் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டது

http://ta.wikipedia.org/s/399e



வீரகுடி வெள்ளாளர் என்பது வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும். முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

Sunday, September 29, 2013

அன்பு உறவுகளே! வணக்கம். வீரகுடி அல்லது வீரகோடி

அன்பு உறவுகளே! வணக்கம்

வீரகோடி வெள்ளாளன்

அல்லது

வீரகுடி வெள்ளாளன்

இதில் எது சரி ?