வீரக்குடி வேளாளர் வரலாறு - கோ.ஜெயக்குமார்.
முசுகுந்த நாடு என்பது முசிறி என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு
முசுகுந்த நாடு என்பது முசிறி என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு வாழ்ந்தது வந்த
முசுகுந்த சக்கரவர்த்தி என்ற அரசனின் தலைமையின் கீழ் வாழ்ந்த்த மக்களின்
பகுதி...
ஆரம்பத்தில் இது 32 கிராமமாகவும் பின்னர் 36 கிராமமாகவும் மாறியது என்பது வரலாறு...
இங்உங்கள் கற்பனைக் குதிரையை காலத்தின் பின்நோக்கி தட்டிவிடுங்கள்.
கட்டிடங்கள் இல்லாத, வாகனங்கள் இல்லாத ஆதிகாலம். குறிஞ்சி நிலத்தில்
மட்டுமே மக்கள் வாழ்ந்த காலம். எங்குநோக்கினும் பசுமை மரங்களும், வன
விலங்குகளும், பெயர் தெரியாத பறவைகளும் இருக்கின்றன. மனிதன் தன்
பாதுகாப்பிற்காக மரத்தின் தடியை உபயோகிக்க தொடங்குகிறான். அதன்
பரிணாமத்தில் கூரான கல்லை அதன் முனையில் இணைக்கிறான். அதிதமிழனின் முதல்
ஆயுதமான வேல் உருவான வரலாறு இதுதான். இன்றுவரை அதன் ஆதாரம் முருகன் வடிவில்
இந்துமதத்தினால் காக்கப்பட்டு வந்திருக்கிறது. குறிஞ்சி நிலத்தலைவன்
அல்லது தெய்வம் சேயோன் என்கிற முருகன் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
பிராமணர்களின் திரிபு காரணமாக சக்தி கொடுத்தாக கதையிருந்தாலும் உண்மை
இதுதானே.
வேல், சூலம், வில் போன்றவை வனமிருங்களை வேட்டையாட பிறந்தவை.
அரம்,வாள்,கத்தி போன்றவை மனிதனுக்கு மனிதனுக்கு சண்டையிட உதவியவை.
பின்நாளில் மனித சண்டைகளுக்கு நியதிகள் உண்டாக்கப்பட்டன. ஆயுத பயிற்சிகளும்
ஆரம்பமாயின. வேல் கையாளுவதிற் சிறந்த வேலாளன், சூலத்தில் சிறந்த
சூலன்/சூரன் – சூலத்தான், வில்லில் சிறந்த வில்லாளன் (அம்பெனும் விசியைக்
கையாளத் தெரிந்த விசியன்), அரத்தில் சிறந்த அரையன், கத்தியாளுவதில் சிறந்த
கத்தியன் இப்படி பிரிவுகள் உண்டாக தொடங்கின. குறிஞ்சியில் மக்கள் தொகை
அதிகமாக, மக்கள் முல்லைக்கு இடம் பெயர்ந்தார்கள். முல்லையில் கால்நடைகளை
வளர்க்கும் அளவிற்கு மனிதர்கள் உயர்ந்தார்கள். கால்நடைகள் செல்வங்களாக
பார்க்கப்பட்டன. களவு தோன்றியது.
களவு
தோன்றினால் காவலும் தோன்றுமல்லவா, காவலுக்கு தலைவன் உருவானான்.
மனிதர்களின் பரிணாமம் வளர்ந்து, மருத நிலத்திற்கு வந்தார்கள். மருதம்
குறிஞ்சி, முல்லை போல காடுகளாக இல்லை. நீர் நிலைகள் அதிகம் உள்ள இடமாக
மருதம் இருந்தது. ஆறுகளும், குளங்களும் இருந்தன. கால்நடைகளுக்கான உணவு
தேவைக்காகவும், தனக்காகவும் நெல் பயிரிடுதலை ஆரமித்தான் மனிதன். குறிஞ்சி
நிலத்தில் வேலாளனாக இருந்தவன், தனது ஆயுதத்தினை விவசாயம் செய்ய
உபயோகிக்கிறான். வெள்ளம் என்று அழைக்கப்படும் நீரை பாசனத்திற்கு
பயன்படுத்தும் அறிவை பெருகிறான். வேலாளன், வேளாளன் ஆகிறான். அதாவது
குறிஞ்சி நிலத்து வேலன் முல்லை நிலத்தில் வேலாளனாகி மருத நிலத்தில் வேளாளன்
ஆகிறான்.
மருத நிலத்தின் மீதான பற்று இன்னும் வெள்ளாளர்களுக்கு தீர்ந்த பாடில்லை.
என் அன்னையின் பெயர் மருதாம்பாள், பாட்டாவின் பெயர் மருதபிள்ளை. இப்படி
மருத நிலத்தின் ஞாபகமாக காலம் காலமாக இந்த பெயர்கள் வழக்கில் உள்ளன. ஆதித்
தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காரணத்தோடுதான் பெயர்கள் சூட்டினார்கள்.
அதுவும் அழகிய தமிழில். மருத நிலத்தில் பிறந்தவன் மருதன். பெரும்பாலும்
மருத நிலத்தில் வாழ்ந்த வெள்ளாளர்களுக்கு பிள்ளை குலப் பட்டம்
வழங்கப்பட்டிருக்கிறது. இல்லத்துப் பிள்ளைமாரில் பெரும் வீரனான மருதநாயகம்
பிள்ளை கூட மருத நிலத்தவன் என்ற அடையாளத்தின் எடுத்துக்காட்டாகவே
இருக்கிறார்.
வீரகோடி வெள்ளளால மக்கள் ஆவார்கள்...இவர்களின் முக்கிய தொழில் உழவுத்தொழில்..
சோழர்கள் - சேர, சோழ, பாண்டியர் எனும் தமிழ் மூவேந்தர்களில் சோழர்களும்
ஒருவர். புலியை கொடியின் சின்னமாக கொண்டும், ஆத்தி மலரை சூடியும்
பெருமைமிகுந்த மன்னர்களாக வாழ்ந்துள்ளார்கள். காலத்தின் அடிப்படையில்
சோழர்களை முற்கால சோழர்கள், பிற்கால சோழர்கள் என வகைபடுத்தி
இருக்கிறார்கள். கலை, அரசியல், சமூகம் என எல்லா துறைகளிலும்
சிறந்துவிளங்கியிருக்கிறார்கள்.
சோழர்கள் என்ற பெயருக்கான காரணத்திற்கு தேவநேயப் பாவாணரும், பரிமேலழகரும்
வேறு வேறு கருத்தினை தெரிவிக்கின்றார்கள். நெல்லின் மற்றொரு பெயரான சொல்
எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து “சோழ” என்று வழங்கிற்று என்கிறார்
தேவநேயப் பாவாணர். குலப்பட்டமாக சோழர் என்பது வழங்கி வந்ததாக பரிமேலழகர்
கூறுகிறார். இரண்டில் எது சரி என்பதை வரலாறை ஆராய்ந்தவர்கள் தான்
கூறவேண்டும்.
வெள்ளாளர் -
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களுள், மருத
நிலத்தில் செம்மைபடுத்தப்பட்ட விவசாயம் தொடங்கியது. அங்கு வெள்ளத்தை
தடுத்து ,தங்கள் தொழில் நுட்ப அறிவோடு கால்வாய் மூலம் நீரை ஏரிக்கு
திருப்பி, அங்கு சேமிப்பு முடிந்த உடன் உபரி நீரை அடுத்த ஏரிக்கு கடத்தி,
சங்கிலி தொடர் போல நீர் மேலாண்மையை உருவாக்கி, தங்கள் விவசாயத்தின்
உயர்வுக்கு பயன் படுத்திய மிகச் சாதாரண மக்கள் வெள்ளாளர் எனப்பட்டனர்.
சரி, இதனைக் கொண்டு சோழ நாட்டில் வாழ்ந்த வெள்ளாளர்களை “சோழிய
வெள்ளாளர்கள்” என்று அர்த்தம் கொள்ளாமா?. ஏறத்தாள இதுவே சரியான கருத்து
என்று சொல்வேன். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர், கொங்கு வெள்ளாளர், தொண்டைமண்டல
வெள்ளாளர், பாண்டி வெள்ளாளர் என்பவைகளின் பின்னனியும் இதைப் போன்ற
குறிப்பிட்ட நாட்டின் வெள்ளாளர்களையே குறிக்கிறது. சோழிய வெள்ளாளர்
என்பதில் உள்ள இரு சொல்லுக்கும் பொதுவான பொருள் பார்த்தோம். சிலர் சோழிய
வேளாளர் என்றும் சொல்கின்றார்களே,. வெள்ளாளர், வேளாளர் இரண்டும் ஒன்றா என்ற
சிந்தனை எழுகிறது.
வேளாளர் -
வெள்ளாளர் எனும் சொல்லுக்கும் வேளாளர் எனும் சொல்லுக்குமான வேறுபாடு
ஆண்டானுக்கும், அடிமைக்கும் உள்ள வேறுபாடாக உள்ளது. வெள்ளாளர் சொல்
விவசாயிகளை குறிக்கும் போது, வேளாளர் என்பது அதிகாரத்திற்குறிய சொல்லாக
உள்ளது. வேள்கள் ஐந்திணைகளில் இருந்தும் தோன்றிய குடித் தலைவர்கள் என
நிறுவுகின்றார், பழந் தமிழகத்தில் அரசுருவாக்கம் பற்றி ஆய்வு செய்த சு.
பூங்குன்றன் (தொல்குடிகள்). இச்சொல்லின் மூலம் ‘வேள்’ என்பதாகும்.யாழ்ப்பாண
பேரகராதி ‘வேள்’ என்ற சொல்லுக்கு மண், தலைவன் என்று பொருள் தருகின்றது.
இவர்கள் போர்களில் அரசர்களுக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள். வெற்றி
பெற்ற புதிய நிலங்கள் இவர்களுக்கு மானியங்களாகக் கொடுக்கப் பட்டது.
வேளாளர் என்பதை வெள்ளாளருக்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது
விக்கிப்பீடியா போன்ற சமூக தளங்களில் உள்ள எழுத்துகளைப் பார்த்து புரிந்து
கொள்ள முடிகிறது. சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர் என்ற வார்த்தைகளுக்கு
அர்த்தம் பார்த்தோம். சோழர்களின் ஆட்சி காலத்திற்கு முன் சோழிய
வெள்ளாளர்களே இல்லையா என்றால் இருந்தார்கள்
தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்
இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.
1. அச்சுக்கரை வெள்ளாளர்,
2. அரும்புகட்டி வெள்ளாளர்,
3. அரும்புகற்ற வெள்ளாளர்,
4. அகம்படிய வெள்ளாளர்,
5. அமுதிடுவார் வெள்ளாளர்,
6. ஆதி சைவ வெள்ளாளர்,
7. ஆரிய வெள்ளாளர்,
8. ஆறுநாட்டு வெள்ளாளர்,
9. ஆற்காட்டு வெள்ளாளர்,
10. இந்து சிவ மத வெள்ளாளர்,
11. இசை வெள்ளாளர்,
12. மலை வெள்ளாளர்,
13. இளவாழை வெள்ளாளர்,
14. ஈச்சங்
கொட்டை வெள்ளாளர்,
15. ஈச்சமொட்டை வெள்ளாளர்,
16. ஊத்து நாட்டு வெள்ளாளர்,
17. எருது மாட்டு வெள்ளாளர்,
18. ஏழூர் நாட்டு வெள்ளாளர்,
19. ஏழுரை நாட்டு வெள்ளாளர்,
20. ஏழுகரை நாட்டு வெள்ளாளர்,
21. ஓ.பி.எஸ். வெள்ளாளர்,
22. ஒள்ளியூர் வெள்ளாளர்,
23. கருணிக வெள்ளாளர்,
24. கரையான் வெள்ளாளர்,
25. கரமாத்தி வெள்ளாளர்,
26. கன்னியாகுமாரி வெள்ளாளர்,
27. கார்காத்த வெள்ளாளர்,
28. காராள வெள்ளாளர்,
29. காரைக்காட்டு வெள்ளாளர்,
30. கானாட்டு வெள்ளாளர்,
31. காணியா வெள்ளாளர்,
32. கருத்துவ வெள்ளாளர்,
33. குக வெள்ளாளர்,
34. குறிஞ்சி வெள்ளாளர்,
35. குறும்ப வெள்ளாளர்,
36. குடிகார வெள்ளாளர்,
37. கொடிக்கால் வெள்ளாளர்,
38. கொண்டல் கட்டி வெள்ளாளர்,
39. கொண்டை கட்டி வெள்ளாளர்,
40. கொந்தரை வெள்ளாளர்,
41. கொந்தல வெள்ளாளர்,
42. கொடுப்புழை வெள்ளாளர்,
43. கொங்கு வெள்ளாளர்,
44. கோனாட்டு வெள்ளாளர்,
45. கோட்டை வெள்ளாளர்,
46. கோட்டைப்பிள்ளை வெள்ளாளர்,
47. சங்கு வெள்ளாளர்,
48. சங்கு தாள் வெள்ளாளர்,
49. சவளை குல வெள்ளாளர்,
50. சாம்பிய நாட்டு வெள்ளாளர்,
51. சாம்ப வெள்ளாளர்,
52. சிலம்பணி வெள்ளாளர்,
53. சிந்து குல வெள்ளாளர்,
54. சித்த நாட்டு வெள்ளாளர்,
55. சிலம்பு கார வெள்ளாளர்,
56. சிறு குடி வெள்ளாளர்,
57. சீர்குடி வெள்ளாளர்,
58. சீந்த வெள்ளாளர்,
59. செம்பொன் வெள்ளாளர்,
60. செம்பை நாட்டு வெள்ளாளர்,
61. செந்தலை வெள்ளாளர்,
62. செம்பி வெள்ளாளர்,
63. சேனை குல வெள்ளாளர்,
64. சேர குல வெள்ளாளர்,
65. சைன குல வெள்ளாளர்,
66. சைவ குல வெள்ளாளர்,
67. சோழிய குல வெள்ளாளர்,
68. தவளை குல வெள்ளாளர்,
69. தவசிப்பிள்ளை வெள்ளாளர்,
70. தட்சண வெள்ளாளர்,
71. துளுவ வெள்ளாளர்,
72. தென்தலை வெள்ளாளர்,
73. தென்திசை வெள்ளாளர்,
74. தேவேந்திர வெள்ளாளர்,
75. தேசிய தேசிகார் ஓதுவார் வெள்ளாளர்,
76. தொண்டை மண்டல வெள்ளாளர்,
77. நா.ம. முதன்மை வெள்ளாளர்,
78. தொ.ம. சைவ வெள்ளாளர்,
79. நற்குடி வெள்ளாளர்,
80. நரம்புகட்டி வெள்ளாளர்,
81. நார் கட்டி வெள்ளாளர்,
82. நான்குடி வெள்ளாளர்,
83. நூலூர் வெள்ளாளர்,
84. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்,
85. நாற்பத்திரன்டூர் வெள்ளாளர்,
86. நேமிநசர் வெள்ளாளர்,
87. நீர்பூசி வெள்ளாளர்,
88. பவள வெள்ளாளர்,
89. பணிக்க வெள்ளாளர்,
90. பாண்டிய வெள்ளாளர்,
91. பால வெள்ளாளர்,
92. 18 மந்தை 34 ஊர் சோழிய வெள்ளாளர்,
93. பொன்கரை வெள்ளாளர்,
94. பூக்கார வெள்ளாளர்,
95. பூந்தமல்லி வெள்ளாளர்,
96. பொடிக்கார வெள்ளாளர்,
97. பைரவ வெள்ளாளர்,
98. மங்கல நாட்டு வெள்ளாளர்,
99. மலை காணும் வெள்ளாளர்,
100. முதடுத்த நாட்டு வெள்ளாளர்,
101. முக்குல வெள்ளாளர்,
102. மூனூர் வெள்ளாளர்,
103. 3 மந்தை 84 ஊர் வெள்ளாளர்,
104. ரத்தினகிரி வெள்ளாளர்,
105. வடதலை வெள்ளாளர்,
106. வன்னிய வெள்ளாளர்,
107. வடக்கு வாடி வெள்ளாளர்,
108. வீரக்கொடி வெள்ளாளர்,
109. வெள்ளான் செட்டி வெள்ளாளர்,
110. வேம்பத்தூர் வெள்ளாளர்,
ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக
பிரிகிறது. அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10 திராவிட சாதிகள் உள்ளன.
கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக
வேறொரு கிளையிலேயே வருகின்றன. இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி
பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து
போகிறது. மேலும், இவர்களுடன் மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில்
இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.
இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில்
அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு
கொண்டுள்ளனர். மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச
பிராமணர்கள் தவிர) திராவிட சாதிகள் ஆகும். நாடாரில் இந்து நாடாரும்,
கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள்
ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.
பிள்ளை -
வேளாளர் சாதியமைப்பில் பிள்ளை பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub castes using Pillai title)
ஊற்று வளநாட்டு வெள்ளாளர் – Oottru Valanattu Vellalar
அகமுடைய பிள்ளை with ancestry in undivided Thanjavur District- Agamudaya Pillai with ancestry in undivided Thanjavur District
ஆறுநாட்டு வெள்ளாளர் – Aarunattu Vellalar
சேரகுல வெள்ளாளர் – Cherakula Vellalar
பாண்டிய வெள்ளாளர் – Pandiya Vellalar
சோழிய வெள்ளாளர் – Chozhia Vellalar
கார்கார்த்தார் – Karkarthar
திருநெல்வேலி சைவ வேளாளர் – Tirunelveli Saiva Velallar
நாஞ்சில் வெள்ளாளர் – Nanjil Vellalar
வீரக்கொடி வெள்ளாளர் – Veerakodi Vellalar
மூன்று மண்டை எண்பத்துநாலு (84) ஊர் சோழிய வெள்ளாளர்கள் – Moondrumandai Enbathunalu Oor Sozhia Vellalar
ஓ.பி.எஸ் வெள்ளாளர் – O.P.S. Vellalar
இல்லத்து பிள்ளைமார் – Illathu Pillaimar
முதலியார் -
வேளாளர் சாதியமைப்பில் முதலியார் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub castes using Mudaliar title)
தொண்டைமண்டல சைவ வெள்ளாளர் – Thondaimandala Saiva Velalar
துளுவ வெள்ளாளர் – Thuluva Vellalar or Arcot Mudaliar
பூந்தமல்லி முதலியார் / பொன்நேரி முதலியார்Poonthamalli Mudaliar/Ponneri Mudaliar
கவுண்டர் -
வேளாளர் சாதியமைப்பில் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்தும் உட்பிரிவுகள்.
(Vellalar Sub-castes using Gounder title)
கொங்கு வெள்ளாளர் – Kongu Vellalar